மழை சுமந்து திரிந்த மேகங்கள்
மண்ணின் மடிதனில் மழைதனை
இறக்கி வைத்திட்டு - ஆகாய வீதியில்
காற்றுடன் தவழ்ந்தாட
எழில் நீலம் சூடிய ஆகாயம்
மெல்ல மேகத் திரை விலக்கி
பூமிக்கு முகம் காட்டி
புன்னகை வீசி வகீகரிக்கிறது !
வானின்று மண் நோக்கி
வருகின்ற மழை துளியை
தன் கிளைதனில் ஏந்தி
வைரம் சூடிய பெருமிதத்தோடு
ஆதவன் சற்றே முகம் காட்டினால்
தக தகவென ஜொலித்து - காணும்
மனங்களை சொக்க வைத்திட
ஆவல் மேலோங்க அசைந்தாடும் மரம் !
இலையதுவே மரத்திற்கு
ஆடையாகிப் போக
பச்சை நிற ஆடையே உடுத்தி
சலித்துப் போனதோ
இந்த மரப் பெண்ணிற்கு ?
மஞ்சளும் அடர்சிவப்புமாய் - இளம்
தளிரையும் பழுத்த இலையையும்
உடுத்தி தன் அழகினை இரசிக்கிறாளோ ?
இயற்கையில் ஆயிரமாயிரம்
வண்ணங்கள் - வண்ணங்களின் எழிலில்
மனதில் தோன்றும் பலவகை
எண்ணங்கள் - எண்ணங்கள் எழுத்தானால்
பிறக்கும் மகிழ்வுடன் புதுப் புது
கற்பனைகள் - கற்பனைகள் வடிவு பெறின்
உரு பெறும் புதுக் கவிதைகள்
கவிதைகள் - மனங்களின் பிம்பங்கள் !
www.vallamai.com/?p=58913
அழகான வரிகள்.... ரசித்தேன்....
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteஇயற்கையில் ஆயிரமாயிரம்
ReplyDeleteவண்ணங்கள் - வண்ணங்களின் எழிலில்
மனதில் தோன்றும் பலவகை
எண்ணங்கள் - எண்ணங்கள் எழுத்தானால்
பிறக்கும் மகிழ்வுடன் புதுப் புது
கற்பனைகள் - கற்பனைகள் வடிவு பெறின்
உரு பெறும் புதுக் கவிதைகள்
கவிதைகள் - மனங்களின் பிம்பம் !
சிறப்பான வரிகள் மட்டுமல்ல, படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வரிகள்! வாழ்த்துகள்!
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் பல ஐயா.
Deleteசிறப்பான கற்பனை. ரசித்தேன்.
ReplyDeleteநன்றி சகோதரரே.
Deleteஅழகான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி சகோதரரே.
Delete//பச்சை நிற ஆடையே உடுத்தி
ReplyDeleteசலித்துப் போனதோ
இந்த மரப் பெண்ணிற்கு ?
மஞ்சளும் அடர்சிவப்புமாய் - இளம்
தளிரையும் பழுத்த இலையையும்
உடுத்தி தன் அழகினை இரசிக்கிறாளோ ?//
:) அழகாக கற்பனை செய்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். :)
அருமையான வரிகள் தோழி
ReplyDeleteவாழ்த்துகள்
நன்றி தோழி.
Delete