Tuesday, February 26, 2013

பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???




வினோதினி... வித்யா....
இன்னும் எத்தனை 
வனிதையர்  ஆசிட்டின்
அகோரப் பசிக்கு
இரையாகி - துடித்து
பலியாயினரோ ???


காதல் வந்துவிட்டது -
உன்மேல் எனக்கு !!!
ஒற்றை வார்த்தையைக்
கேட்டதும் - உங்கள்
பின்னால் ஓடிவர
பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???


விரும்பியதாகவும் காதலித்ததாகவும்
கூறுகிறீர் - நீங்கள் விரும்பும் ஒன்றை
கண்ணெனக் காக்க மாட்டீரோ ??
விரும்பிய ஒன்றை
உருத் தெரியாமல் சிதைக்கவும்
மனம் ஒப்பிடுமோ ???


உங்கள் சகோதரிகளை
கண்ணென காத்திட
துடிக்கிறீரே - எல்லாப்
பெண்களும் எவரோ ஒருவரின்
சகோதரி தானென்பது
ஏன்  உங்களுக்கு விளங்கவில்லை ???

வலியோர் அநீதி இழைத்துவிட்டு
சட்டத்தின் திரைக்குப் பின்
முகத்தை மறைத்துக் கொள்ள
இழப்பும் வலியும் ஏனோ
எளியோருக்கு மட்டுமே !!!

இறைவா !!! இனி
சிருஷ்டிக்கும் ஒவ்வோர்
பெண் சிசுவுக்கும்
உறுதியான பாதுகாப்பான
கவசத்தை கொடுத்து விடு !
ஏனெனில், உன் பிரபஞ்சத்தில்
பாவையருக்கு பாதுகாப்பு இல்லை !!!

பி.தமிழ் முகில் நீலமேகம்

http://www.vallamai.com/literature/poems/32533/ 

Friday, February 15, 2013

இதிலென்ன பொறாமை ??



இறைவன் போடும் முடிச்சுகள்
இணைந்திடும் இதயங்கள்
இன்பமாய் நடந்தேறும் திருமணங்கள்
இங்குமேன் தலைதூக்க வேண்டும் பொறாமைகள் ???

இறைவனுக்கு காலம் காலமாய்
இறைக்கிறாய் காணிக்கை - நானோ
இன்றொரு நாள் வைத்தேன் விளக்கை
இன்றே கிடைத்ததெனக்கு புது வாழ்க்கை !!!

இளையாள் எனக்கு கிடைத்தது -
இல்வாழ்க்கை !! மூத்தவள் உனக்கேன்
இன்னும் இல்லை - மனம் போல்
இன்ப மணவாழ்க்கை ??

இப்படித்தான் சில
இரக்கமற்ற இதயங்கள்
இயல்பாய் நம் நெஞ்சில்
இறக்கிச் செல்லும் இடிகள் !!

இதிலென்ன இலாபம்
இந்நெஞ்சங்களுக்கு ???
இவர்களும் பெண் தானென்று
இதயத்தில் தோன்றுவதெப்போது ???

இவ்வுலகில் பெண்ணே பெண்ணுக்கு எதிரி -
இந்த இழி பழி தான்
இனி மாறும் காலமும் தான் எப்போது ??
இன்ப நல்லுறவும் தான் பிறப்பதெப்போது ??

http://www.muthukamalam.com/verse/p1130.html 

Saturday, February 9, 2013

உலகின் உண்மை முகம் - கவி விசை உலக சாதனை நூல்




கவி விசை - உலக சாதனைக்காக 402 கவிஞர்கள் ஆசிரியர்களாக இருந்து உருவாக்கிய நூல்

உலகம் - தன் வாய்க்கு கிட்டியதெல்லாம்
அவலென மென்றிடும் !!!
அது நன்மை தீமை பாகுபாடு
அறிந்ததுமில்லை - அதை
அறியும் எண்ணம் என்றும்
அதற்கு இருந்ததும் இல்லை !!!

முகத்திற்கு முன்
ஆயிரமாயிரம் துதிகள் ......
முதுகுக்குப் பின்னோ
விழுந்திடும் மிதியடிகள் !!!
ஆக  -  வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
ஏற்க வேண்டும் சொல்லடிகள் !!!

சபைதனில் அறிந்ததை
வெளிப்படுத்தினால் - தற்பெருமை என
தப்புக் கணக்கிடும் !!!
மௌனமாய் இருந்தாலோ
ஏளனப் பேச்சில்
நம்மை ஏய்த்திடும் !!!

இலட்சியங்கள் பல தோன்றி
கனவென வீழ்வதும்
கனவுகள் பல தோன்றி
நிலையாக வாழ்வதும்
மானுடர்களின் -
உலக வாழ்வில் தாம் !!!

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம்  வெளியிட்ட கவிவிசை நூலில் பிரசுரமானது.

Tuesday, February 5, 2013

நம்பிக்கை



விழுந்து விடுவோம் என்று
ஓர் நாளும் வித்துக்கள்
வீண் பயம் கொள்வதில்லை !!!
எழும் போது விருட்சமாய்
வீரியத்துடனே எழுவோம் என்ற
நம்பிக்கையுடனே  மண்ணில்
தம்மை ஐக்கியமாக்கிக் கொள்கின்றன !!

http://www.vallamai.com/literature/poems/31686/ 
Related Posts Plugin for WordPress, Blogger...