மரம் - மனிதனுக்கு அதுவே
வரம் ! - மண்ணுக்கு அளிக்குது
புது உரம் - அதை வெட்டுவதற்கு
உயர்வதேன் மானுடனின் கரம் ?
செல்லுயிரி துவங்கி
புள்ளினம் - மானிடர் என
புவியிலுள்ள ஜீவராசிகட்கெலாம்
புகலிடம் அளித்துக் காக்கும் பரோபகாரி !!!
உண்ண உடுக்க உறங்க - அனைத்திற்கும்
உச்சிமுதல் பாதம் வரை - மரமதை
உபயோகப் படுத்துகிறோம் - ஆனால் ஏனோ
உதாசீனப் படுத்துகிறோம் - பெருமை உணராமல் !!!
உயிர்வளி வழங்க உயர்ந்தோராம்
உன்னத உயிர்களான மரங்களின்
உயிரைக் குடித்துவிட்டு - நாம் உலாவ இருக்கிறோம்
பிராணவாயுக் கலன்களுடன் !!!
மண்ணை விட்டு மரமதை துரத்திவிட்டு
மாட மாளிகையும் கூட கோபுரங்களும்
மகிழ்வாய் கட்டுகிறோம் - ஆண்டாண்டாய்
மழை இல்லையே என்று புலம்பியபடியே !!!
விதை விருட்சமாகி மலர் சுமந்து
காய் கனிதனை ஈந்து - உயிர்வளி
கொடுத்து - இலையதுவும் சருகாகி
தாங்கிய மண்ணிற்கே உரமாகிடுகிறது !!!
அன்னமிட்ட விட்டிலேயே
கன்னமிடுதல் போல் - மரங்களின்
மடியில் சுகம் கண்ட நாமே
அவற்றை வெட்டிச் சாய்த்தல் முறையோ ???
மனிதம் கற்போம் -
மரங்களிடம் !!! - வாழ்ந்திடுவோம்
இறைவனளித்த வாழ்வினை
என்றென்றும் மனித நேயத்துடன் !!!
http://www.tamilvattam.com/மரமும்-மனிதமும்
/// உண்ண உடுக்க உறங்க - அனைத்திற்கும்
ReplyDeleteஉச்சிமுதல் பாதம் வரை - மரமதை
உபயோகப் படுத்துகிறோம் - ஆனால் ஏனோ
உதாசீனப் படுத்துகிறோம் - பெருமை உணராமல் !!! ///
உண்மை வரிகள்... உணர வேண்டியது அதிகம்...
தொடர்க... வாழ்த்துக்கள்...
நன்றி...
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா..
Deleteமனிதம் கற்போம் -
ReplyDeleteமரங்களிடம் !!!
அழகான வரிகள்...
வாழ்த்துகள். தொடருங்கள்...
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!
Deleteஎல்லோருக்கும் தெரியுது நாம் செய்யறது தப்புன்னு ஆனாலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்காங்க...அருமையான சூழல் கவிதை
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி...
Delete''..மனிதம் கற்போம் -
ReplyDeleteமரங்களிடம் !!! ..''
ARMAI....
Vetha.Elangathilakam.
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே...
Delete