மண்மகளின் தாகம்
தீர்க்க
முகிலன்னையும் நீர்தனை
மழையெனப் பொழிகின்றாள்
!
சுட்டெரிக்கும்
சூரியனவனால்
நாவறண்டு தவித்த மண்மகளோ
நீரினை சட்டென்று உள்வாங்குகிறாள் !
தாகம் தீர்த்தமைக்கு
நன்றியாக
மண் வாசனை தனையும் – மண்மகள்
காற்றினில் பரப்பிடுகிறாள் !
நீர்த்துளிகள் தன்மேல்
பட்டதோ
தண்மையும்
தான் புத்துணர்வளித்ததோ என்று
மரங்களும் காற்றில் தலையசைத்தாடுகின்றன !
செடிகளும் கொடிகளும்
மலர்களும் மெளவல்களும்
புதுப்பொலிவுடன்
புன்னகைக்கின்றன !
வராத விருந்தினர் எவரோ
வந்துவிட்டது போன்றொரு
உற்சாகத்தில்
பாடித் திரிந்தன தவளைகள் !
சிறு பூச்சியும் புழுவும்
மழையில்
நனைந்திடக் கூடாதே
என்று அக்கரையுடன்
குடையாய் முளைத்தன காளான்கள் !
மழையின் வரத்திற்காக தவமியற்றிய
வித்துக்களும்
மெல்ல மண்னை
முட்டிக்கொண்டு
உலகை எட்டிப் பார்த்தன !
மழையின் பாடலுக்கு
மெட்டமைக்க
ரீங்கார இராகங்களைப் பாடி
உற்சாகமாய்த்
துள்ளித் திரிந்தன சில்வண்டுகள் !
இயற்கை வரவேற்பளிக்குது
- மழைக்கு
கோலாகலமாய்
உற்சாகத்துடன் ! - மனிதர்களே !
விதிவிலக்காய்
குடைகாட்டி மழை மறியல் எதற்கு ?
நன்றி, காற்றுவெளி இணைய இதழ்
http://kaatruveli-ithazh.blogspot.com/2013_07_01_archive.html
நன்றி, காற்றுவெளி இணைய இதழ்
http://kaatruveli-ithazh.blogspot.com/2013_07_01_archive.html
அதானே...? குடை எதற்கு...?
ReplyDeleteவரிகளில் நனைந்தேன்...
வாழ்த்துக்கள்...
தங்களது அன்பான வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!!
Deleteஉங்கள் கவிதை படித்ததில் மழையில் நனைந்தது போலுணர்ந்தேன்.
ReplyDeleteஒரு சினிமாப் பாட்டில் வருவது போல் நாமே மழைக்கு கறுப்புக் குடை காட்டி திருப்பியனுப்பி விட்டு , அப்புறம் மழைக்காக யாகம் எல்லாம் செய்கிறோம்.
இனி கறுப்புக் கோடி காட்டாம, நனைந்து மகிழ்வோம்...
நன்றி ஒரு அருமையான கவிதையை பகிர்ந்து கொண்டதற்கு....
தங்களது வருகைக்கும் அழகானதொரு கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
ReplyDeleteஅருமை... குடை பிடிக்கும் காளான் கற்பனை அருமை...
ReplyDeleteமிக்க நன்றி தோழி....
Deleteஅழகிய அர்த்தங்கள் பொதிந்த கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் சகோதரரே...தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த
Deleteநன்றிகள் !!!
இயற்கை வரவேற்பளிக்குது - மழைக்கு
ReplyDeleteகோலாகலமாய் உற்சாகத்துடன் நாமும் வரவேற்பளிப்போமே..!
தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி.தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!
Delete