Thursday, March 19, 2015

அழகான காதல்!

 16483711086_5e9d5432f1_z

முகத்தில்  விழுந்த சுருக்கங்கள்
முடிந்து வைத்துள்ளது  காலங்காலமாய்
பகிர்ந்து கொண்ட காதலை
பலங்கொண்ட ஆலம் விழுதுகளென !

விழித்திரை மூடி மனத்திரை திறக்க
கண் அவர் என்றானவர் அவ்விடம்
எழுந்தருள தித்தித்தது நாக்கு மட்டுமல்ல
நெஞ்சில் நிறைந்த இன்ப நினைவுகளுமே !

மனையாள் இங்கே மழலை ஆகிட
மணாளனோ அன்னையாய் வடிவெடுக்க
தாய்க்குப் பின் தாரமென வந்தவருக்கு
தாயுமானவராய் மாறிப்போன அற்புத காட்சி !

அனுசரித்து வாழ அறிவுரைகள் பலவோடு
அடியெடுத்து வைத்தேன் இல்லற வாழ்வினுள்ளே
அரவணைத்துப் போகும் அன்பானவர் தங்களோடு
அழகானதே நம் இல்லறம் நல்லறமாய் !

அன்பாலே அழகான  குணவதி
அமைந்தாரே எந்தன் மணவாட்டியாய்
அன்னையாய்   பிள்ளையாய் வாழ்ந்து
அழகாக்கினாரே எந்தன் வாழ்வு தனையே !

காலம் கடந்தும் கோலம் மாறியும்
இளமை மாறா இந்த  இன்ப காதல்
தொடரட்டும்  ஏழேழ் பிறப்பிலும் -
அழகாய் ஆக்கட்டும் காதல் தனையே !

http://www.vallamai.com/?p=55464
   

9 comments :

  1. காலம் கடந்தும் கோலம் மாறியும்
    இளமை மாறா இந்த இன்ப காதல்
    தொடரட்டும்
    அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. காலம் கடந்தும் கோலம் மாறியும்
    இளமை மாறா இந்த இன்ப காதல்
    தொடரட்டும் ஏழேழ் பிறப்பிலும் -
    அழகாய் ஆக்கட்டும் காதல் தனையே !

    ReplyDelete
  3. என்றும் இளமை அதுதானே காதலின் மந்திரம்... அழகியதலைப்பும் ஆக்கமும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. மிகவும் அழகான வரிகளுடன் ஒரு காதல் பாட்டு. உண்மையான காதல் இதுவன்றோ!

    வயதாக வயதாகத்தான் உள்ளத்தின் அன்பு ஊற்றெடுத்துப் பெருகும்; ஒருவருக்கு மற்றொருவரின் ஆதரவும் தேவைப்படும். பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  5. அய்யா வணக்கம்.
    குடும்ப விளக்கில் பாரதிதாசன் காட்டும்

    “முன்னைநாள் கவர்ச்சி யில்லை

    முறுவலாய் என்னைக் கொல்லும்

    அன்றைநாள் மலர்ச்சி யில்லை

    அழகிய பற்கள் இல்லை

    என்னையே அடக்கம் செய்த

    இடுப்பசை வின்றிங் கில்லை

    என்னதான் இலையென் றாலும்

    எனக்கிங் கவள்தான் எல்லாம்
    தீயினை மூட்டி விட்டுச்

    சிரித்திடும் சீண்டல் இல்லை;

    வாயினை இதழ்ப்பூட் டாலே

    பூட்டிடு ம் முயற்சி யில்லை;

    ஆயிரம் பொருள்கள் கூறும்

    அங்கமே பேச வில்லை;

    ஆயினும் எனக்க வள்தான்

    ஆயுளின் இன்ப வெள்ளம்“

    எனும் கவிதை வரிகளை நினைவூட்டிப் போகும் தங்களின் படைப்பு அருமை

    த ம 3

    ReplyDelete
  6. கவிஞர் பாரதிதாசன் அவர்களின் அற்புதமான வரிகளை வாசிக்கத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...