Friday, July 31, 2015

பொறாமை

பொல்லாத எண்ணமது
சொல்லாதே கொல்லுமது
நிம்மதியை குலைக்குமது
நினைவுகளில் அரிக்குமது -
பொறாமை !

சிறு பொறியாய்
மனதில் விழுந்து
எண்ணம் நினைவெலாம்
எரித்துக் குலைத்திடும்
பொறாமை !

நட்பைக் குலைத்திடும்
நலனைக் கெடுத்திடும்
நிம்மதியை விலையாய்
நிர்பந்தித்து பறித்திடும்
பொறாமை !

பொதுநலன் அழித்திடும்
தன்னலம் பெருக்கிடும்
தன்னைச் சுற்றியே
உலகமதை குறுக்கிடும்
பொறாமை !

தன் சுயமதை அழித்து
நாளும் எதையோ
தேடித்தேடி ஓட வைத்து
அலுத்துக் குலைத்திடும்
பொறாமை !

காண்பதற்கெலாம்
பொறாமைப்படும் மனம்
ஆசைப்படாத ஒன்று
ஏதேனுமிருப்பின் - அது
மரணம் !

பொறாமையை தூக்கிலிடுவோம்
விசாலமான மனமதன்
அடைத்த கதவுகளை
முழுவதும் திறந்திடுவோம் - சுவாசிப்போம்
மகிழ்ச்சியெனும் தென்றலின் தண்மையை !


3 comments :

  1. பொறாமை - கோபம் போல.... தன்னையே அழித்து விடும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இது
    மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள் சகோ !
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...