Saturday, August 1, 2015

சுழலும் வாழ்வு



தகிக்கும் வெயிலானால் என்ன
நடுநடுங்கும் குளிரானால் என்ன
உழைத்தால் தானிங்கு
எண்சான் வயிறு நிரம்பும் !
துள்ளித் தாவும் மீன்கள்
காணும் கண்களை
கவர்ந்திழுத்தாலும் - இங்கு
வலையில் துள்ளும் மீன்களே
எம் உள்ளந்தனை
நிறைவாக்கும் !
கொட்டும் மழைக்காய்
இங்கே நாளும் தவம் -
நிரம்பியோடும் நீரே
எம் வாழ்வாதாரம் !
படகும் வலையும்
எமக்கு அன்னமிடும் !
வயிறும் தான் வாடாது
நாளும் காத்திடும் !
உழைப்பு மட்டுமே
 உறுதுணை ஆகும் !
உறுதியுடன் - அயர்விலா
முயற்சியுடன் - சுழலும்
எம் வாழ்வு நாளும்
இப் புவியின் மடி மீதே !

நன்றி, வல்லமை
http://www.vallamai.com/?p=60048



9 comments :

  1. உழைப்பு என்றும் உயர்வு...

    ReplyDelete
  2. //உழைப்பு மட்டுமே
    உறுதுணை ஆகும் !//
    அருமை..வாழ்த்துகள் தோழி

    ReplyDelete
  3. உழைப்பே மனிதனின் உயிர்நாடி!
    உரைத்திட்ட அருமையான கவி வடிவம்!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  4. கவிதை அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...