விரலின் ஸ்பரிசம் பட்டதும்
இசையாய் தந்திகள் புன்னகைக்க
கடல் அலைகளுக்கு போட்டியாய்
நாத அலைகளும் - காற்றினில்
கலந்து தவழ்ந்து வர
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
இசையின் வாசம் தனை
சுவாசிக்க - புறாவும் கூட
பறந்தோடி வந்ததுவோ ?
பொன் நகையினும்
கீற்றுப் புன்னகை அது
நங்கையினை அலங்கரிக்க
அவர்தம் விரல் மீட்டும்
வீணையின் நாதம்
சுற்றத்தையும் வசீகரிக்க
மண் வாசனையும்
நாசிகளை கவர்ந்திழுக்க
இனிமையானதோர் பொழுதின்
எழில் காட்சி !
இயற்கையின் அழகிற்கோர்
நற்சாட்சி !
படமும் படத்திற்கேற்ற பாவும் அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteதளம் திறக்க அதிக நேரம் ஆகிறது... (waiting for tamilmanam.net) காரணம் தமிழ்மணம் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நம் தளத்தில் சரி செய்யலாம்... வாசகர்களுக்கு பதிவை வாசிக்க, கருத்துரை இட உதவும்...
ReplyDeleteவழிமுறை : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html
வீணையின் நாதம்
ReplyDeleteசுற்றத்தையும் வசீகரிக்க// படம்...சொல்லும் நாதம் உங்கல் கவிதையிலும் ஒலித்தது...அருமை...வாழ்த்துகள்!
இசையால் வசமாகா இதயமெது?
ReplyDelete:))
கவிதை அருமை.
ReplyDelete