Saturday, January 5, 2019

மழையின் சபதம் !

வரவேற்க ஆளும் இல்லை
வந்தால் தங்க இடமும் இல்லை
வா.. வா... என்றே ஏங்குவதும்
வந்தால் முகம் திருப்பி ஓடுவதும்
வந்தாலும் குற்றம் - வராவிட்டாலும்
வசவுகள் ஆயிரம் ஆயிரம் !
பெருமூச்செறிந்து தவிக்கிறேன் !
ஆறு குளம் கால்வாய்
நீர்வழிப் பாதையெலாம்
குப்பை கிடங்குகள் ஆயின !
ஏரிகளெலாம் அடுக்கு மாடி
குடியிருப்புகளாயின ! - எம்
இடமெலாம் மானுடரே ! - நீவிர்
ஆக்கிரமித்திட - ஆக்கிரமித்த
உம் மடிகளிலேயே தஞ்சம் புகுந்தோம் !
அலறி அடித்து எங்கே ஓடுகிறீர் ?
கிடைக்கயில் சேமிக்க மறுப்பீர்
கிடைக்காத வேளையில்
 ஏங்கி தேம்பி தவிப்பீர் !
நீர்ப்பந்தல் வைத்து குடித்த
நீரெலாம் இன்று - குடுவைகளில்
பல பெயருடன் - பல சுவையுடன் !
குறித்து வைத்துக் கொள்ளுங்கள் !
நாளை நீருக்காக போர் மூளும் -
வறண்ட தொண்டையுடன்
கண்களில் இருள் கவிய
மூச்சும் இரைக்க நிற்கையில்
சடாரென்று முகத்தில் விழுந்து
சம்மட்டியாய் அடித்து உணர்த்துவேன்
ஒற்றை மழைத்துளியாய் !

3 comments :

  1. நீரின் குரல்.... சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள் சகோ.

    ஒரு நாள் நீருக்காகவே போர் மூளும் என்பதில் சந்தேகமில்லை.

    தொடரட்டும் பதிவுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. மழையின் மனம் அருமையாக வெளிபட்டிருக்கிறது உங்கள் கவிதையில்..வாழ்த்துகள் தமிழ். மீண்டும் எழுத தொடங்கியது மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...