அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள்
அனலில் தகிக்கும் கொல்லனின்
உலையாய் மாறியிருந்தது- அந்தத்
தொழிற்சாலை !!! – ஆம்
!!
இங்கே புது மலர்கள்
அனல் வீசும் நெருப்புப்
பெட்டிகள் தயாரிக்கின்றன
!!!
அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு
வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு
துவக்கும் அன்றைய தினம் –
தாள்கட்டுகள் குச்சிகள்
சில்லு அட்டைகள் பசை கிண்ணங்கள்
அச்சுக் கட்டைகள் என்று
இவற்றுடனேயே கழிகிறது !!!
நேர்த்தியாய் அடுக்கிய
தாள்கட்டுகளை அழகிய
தீப்பெட்டிகளாய் உருவாக்கி
காய வைத்து குரோஸ் கணக்கிட்டு
கட்டி அடுக்கும் வரை ஓய்வதில்லை
!
ஆனால் அதன் பின் அம்மலர்களின்
முகத்தில் புன்னகையில்லை
!!!
காலையில் அழகாய்
மொட்டவிழ்ந்து மாலையில் -
சருகாய் துவண்டு காய்வது
மறுநாள் மீண்டும் மலர்வது...
இங்ஙனம் அன்றாடம்
மலர்வதும் சருகாவதும்
இப்பிஞ்சுகட்கு விதிக்கப்பட்ட ஒன்றோ ??
ஒளியேற்ற துணைபுரியும்
தீப்பெட்டிகளும் தீக்குச்சிகளும்
உருவாக்கும் இவர்தம் வாழ்வில்
ஒளி பிறக்கும்
காலமும் தான் எப்போது ?
இவர்கள் உலகிற்கே வழிகாட்டும்
ஒளிப்பந்தங்கள் ஆவதெப்போது ??
http://www.tamilkurinji.in/news_details.php?/இவர்கள்/வாழ்வில்/ஒளி/பிறப்பது/எப்போது/-/பி.தமிழ்முகில்/நீலமேகம்/&id=30008 |
தீக்குச்சியில் எரிந்து சாம்பலாவது இவர் கனவுகளுமல்லவா?
ReplyDeleteஉண்மை தான் சகோதரி. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!!
Delete''..ஒளி பிறக்கும்
ReplyDeleteகாலமும் தான் எப்போது ?
இவர்கள் உலகிற்கே வழிகாட்டும்
ஒளிப்பந்தங்கள் ஆவதெப்போது ??..''
சோகம் தான்-
இது தீராத பிரச்சனை தான்.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மனமார்ந்த நன்றிகள் கவியே !!!
Delete