Monday, April 1, 2013

நல்ல உள்ளங்களின் உடமைகள்!



 




உறவுகள்  உணர்வுகள்
இவையெல்லாம் வெறும்
வார்த்தைகள் என்ற
நிலையாகி – காலங்கள்
பல கடந்துவிட்டன !!!
இதயப் பூர்வமான
அன்பு என்பதெலாம் 
அவசர உலகிலெதற்கென்று
இறக்கை கட்டிக்கொண்டு
பறக்கின்றன – பல உறவுகள் !!!
காலடியில்  மிதிபட்டாலும்
காலமெலாம் உந்தன்
நலமான  வாழ்விற்காய்  
துடித்துக் கொண்டே
இருப்பேனென – சில நல்லுள்ளங்கள் !!!
காயங்களும் கண்ணீரும்
சோகங்களும் சோர்வும்
காலங்காலமாய் 
நல்லிதயங்கட்கு மட்டும்
பாத்யதை என்றானதும் ஏனோ ???

http://www.muthukamalam.com/verse/p1167.html 


No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...