ஆசி
கேட்டு தலை சாய்க்கும்
அன்பருக்கெல்லாம்
– அவர்
கொடுப்பது
ஐம்பது பைசாவாயினும்
ஐந்நூறு
ரூபாய்களாயினும்
பாரபட்சமில்லாது
ஆசிகளை
அள்ளி
வழங்கிவிட்டு
கிடைத்த
பணத்தையெல்லாம்
பாகனுக்கு
வழங்கிவிட்டு
மெல்ல
சுவற்றோரம் சாய்கையில்
அதன்
கண்களில் வழியும்
கண்ணீரை
– அதன்
ஆசியில்
ஆனந்தமாய்
கோயிலை
விட்டுக்
கிளம்பும்
எவரும்
அறிந்து
இருக்க வாய்ப்பில்லை !!!
ம்.. நிதர்சனக் கவிதையோ...
ReplyDeleteமனதில் வலிக்கிறதே...
நல்ல வரிகள். அருமை. வாழ்த்துக்கள் தோழி!
ஆம் தோழி. சிறு வயதில் யானையைப் பார்த்தால் ஓர் பெருமகிழ்ச்சி தான்.இன்று, ஒர் கவளம் சோற்றுக்காக, பாகனின் அங்குசத்துக்கு கட்டுப்பட்டு
Deleteவலியில் உகுக்கும் கண்ணீர், நெஞ்சை பிசைகிறது.
தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.
உணர்வு பூர்வமான கவிதை!
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் தோழி !!!
Delete