எத்தனை முறை
திரும்ப திரும்ப
திறந்து பார்த்தாலும்
புதிதாய் அங்கிருக்கப் போவது
ஒன்றுமில்லை !!! - இது
நாமனைவரும் அறிந்த
நிதர்சனமான உண்மை !
ஆனாலும் அதென்னவோ
அனைவரையும் காந்தமாய்
ஈர்க்கத்தான் செய்கிறது !!!
மது புகை போல
இதுவுமோர் போதை தான் !
முகமறிந்த உறவுகளை
மறக்கடித்து - முகமறியா
நட்புகளை தேடியலையச் செய்து
முகமூடிகட்குப் பின்னும்
போலிப் பெயர்கட்குப் பின்னும்
ஒடியலையச் செய்து
உள்ளத்தையே அடிமையாக்கி
உற்றோரை மறக்கடிக்கும்
முகநூல் தேவை தானா ???
http://www.muthukamalam.com/verse/p1166.html
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...
அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல தனபாலன் ஐயா அவர்களே !!! தங்களது மனமார்ந்த வாழ்த்துகட்கு நன்றிகள் பல.
Delete//முகமறிந்த உறவுகளை
ReplyDeleteமறக்கடித்து - முகமறியா
நட்புகளை தேடியலையச் செய்து//
முகமறிந்த உறவுகள்
சுகம் தருவதில்லை.
சமயத்தில்
முகம் கொடுத்து
பேசுவதுமில்லை.
முகமறியா முகங்களோ நம்
அகங்களை வெல்கிறது.
அன்பு செலுத்துகிறதோ இல்லையொ
வம்பு வளர்ப்பதில்லை.
வலை வழியே வரும் எனக்கும்
அலை வழியே வருமுங்கள்
கவிதையும் ஓர்
காதல் கடிதம்.
படிப்பேன் தினமும்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றிகள் பல சுப்பு தாத்தா அவர்களே !!!
Delete