தண்மையைச்
சுமந்து வரும்
மெல்ல நம் மனம்
தழுவும்
புத்துணர்வு தனை
நம்முள் பரப்பி
புது உற்சாகம்
நமை ஆட்கொளச் செயும்
இன்பமான உயிர்வளி
!!!
வாழ்வின் ஆதாரமாயும்
அவசியத் தேவையுமான
உயிர்வளி !
இன்றோ நஞ்சாய் ! –
ஏன் ? எதனால் ?
புகை ! புகை ! எங்கும்
புகை ! எதிலும் புகை !
வாகனப் புகை ! தொழிற்சாலைப்
புகை !
சிகரெட் புகை ! எரிக்கும்
குப்பையினால் புகை !
காற்று மண்டலமே
புகை மண்டலமாகிவிட
எங்கு தேடுவது தூய்மையான
உயிர்வளியை ?
காற்றைத் தூய்மைப்
படுத்தி
நமக்கு உயிர்வளி
வழங்கும் உத்தமர் அவர்தம்
உறவினை வெறுத்தோம்
– சுயநலப்
பேயும் தான் மனதினை
ஆட்கொள்ள
உலக உயிர்க்கெலாம்
அன்னையென
அடைக்கலமளித்து காக்கும்
மரங்களையும் வெட்டிக்
குவித்தோம் !
நினைவில் இருத்திக்
கொள்வோம் –
இயற்கையை மதியாது
உதறிவிட்டு
செயற்கைக்கு வரவேற்பளிக்கிறோம்
!
நமக்கு நாமே
- நம்மை அறியாது
சூன்யம் வைத்துக்
கொள்கிறோம் !
நாம் உயிர்
வாழ உயிர்வாயுதனை
கலன்களில்
அடைத்து
முதுகினில் சுமந்து
திரியும்
காலமதுவும் வெகுதொலைவிலில்லை
!!!
மரங்களைக் காத்து தூய்மையான
உயிர்வளிக்கு
வழிவகை செய்தால்
– வாழலாம் நலமுடன் !!
இல்லையேல் – அருகிவரும்
இனமதில்
மானுடம் சேர்ந்தாலும்
ஆச்சர்யப் படுவதற்கில்லை
!!!
நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொண்டது உண்மை...
ReplyDeleteவிழிப்புணர்வு அனைவருக்கும் வர வேண்டும்...
விழித்துக் கொண்டால் தான் நாளை நமக்கு வாழ்வே...இதை ஒவ்வொருவரும் உணர்ந்து நடத்தல் வேண்டும்.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
சமீபத்திய இரண்டு பதிவுகளையும் தமிழ்மணத்தில் (+1) இணைத்து விட்டேன்... நன்றி...
ReplyDeleteநன்றிகள் பல ஐயா.
Delete