Thursday, August 18, 2011

வானவில்

வான வீதியில் நடக்கிறது
வண்ண ஊர்வலம்!!!
மேகமகள் மழைத் துளிக்கொண்டு
பன்னீர்  தெளிக்கிறாள் - உற்சாகமாய்.....
கதிரவனை வரவேற்க!!!
அவனது ஒளிக் கீற்றுகள்
பட்ட நொடியில்
விரிந்தது வானவில்!!
ஏழ் வண்ணங்களைக் கொண்டு
வானவீதியின் அலங்கார வளைவுகள் என!!!
நினைத்த நேரத்தில் காண முடியா
அதிசயமாய்- அசத்தும் ஆச்சர்யமாய்!!!
 கண நேரத்தில்  கண்களில் பட்டு மறையும்
ஒளி ஓவியமாய் !!!
உள்ளம் கொள்ளை கொள்ளும்
இயற்கையின் அதிசயம் - வானவில்!!!
http://eluthu.com/kavithai/36944.html 

Wednesday, August 17, 2011

மௌனம்!!!

வார்த்தைகளின் சப்தத்தை விட
ஆயிரம் மடங்கு
அதிகமாக ஒலிப்பது - மௌனம்!!!
நொடிப் பொழுதில் ஆயிரம்
வார்த்தைகளை பேசி விடுகிறது.....
உதடுகளின்று வரும்
வார்த்தைகளின் ஒளியை விட
உள்ளத்தினின்று வரும் வார்த்தை -
உண்மையானது- உன்னதமானது!!! 

http://eluthu.com/kavithai/35983.html 


கடிதம்

உள்ளங்களின் பிரதிபலிப்பை
எழுத்துக்களின் பிம்பமாக்கும்
அதிசய கண்ணாடி....
ஆயிரம் மைல்கள் அப்பால் சென்றாலும்
உறவை அருகே கொண்டுவரும்
உன்னத கருவி...
வாய் திறந்து பேச யோசிக்கும் நொடியில்
உள்ளம் திறந்து கொட்டிவிட உதவும்
அற்புதக் கண்டுபிடிப்பு....
கணினித் திரை காட்டாத
உள்ளத்து உணர்வுகளை ......
உண்மையாய் காட்டிவிடும் -
நாம் கைப்பட எழுதிய கடிதம்!!!! 

http://eluthu.com/kavithai/35982.html 

மழை

தன்மையை தன்னகத்தே கொண்ட 
 மழை அன்னை -கார்முகில் தேரில் 
பூமி நோக்கி வந்து கொண்டிருக்கிறாள் -
மண்ணின் மணம் பரப்ப!!!
அன்னையின் வரவை அறிவிக்க 
 மத்தளமென  இடி முழங்க 
வண்ண விளக்குகளென 
மின்னல் ஒளிபாய்ச்ச 
துளிகளாய் வருகிறாள் 
 மழை அன்னை.......
அவளின் வரவிற்காக 
காத்திருந்தது போன்று 
எங்கிருந்தோ ஓடி வந்து விட்டன-
தவளைக் கூட்டங்கள்.....
இன்னிசைக் கச்சேரியை ஆரம்பிக்க!!!
மழையைக் கண்டதும் அங்கங்கே 
காளான் குடைகள் விரிந்து நிற்கின்றன...
மரங்களும் சிலிர்ப்புற்று 
அசைந்தாடி நிற்கின்றன.......
வாருங்களேன் .....நாமும்
 மழையுடன் மகிழ்ந்திருப்போம் !!!

வானவில்!!!

மேகமகள் மழையை 
 பன்னீர் எனத்
தெளித்து 
கதிரவனை வரவேற்க 
அவனது  வருகையால் 
மழையை ஒளி குறுக்கிட்டு 
நின்ற நேரம்-மேகப் பெண்ணவள் 
வெட்கத்தால் வளைய 
அங்கு பிறந்தது 
வானவில்!!!

Tuesday, May 24, 2011

பெண்

உயிர் கொடுத்து 
ஊண் வளர்க்கும் 
பொழுது - தாயாய் 
ஈடிணையில்லா தியாகம்!!

எண்ணங்களின் வடிகாலாய்
கனவுகளின் உருவமாய் 
எண்ணும் போது -மகளாய் 
அளவில்லா பாசம்!!!

மென்மையாய் உரிமை கொண்டு
கண்டிப்பால் வழிநடத்தும் 
நேரத்தில் - சகோதரியாய் 
என்றும் மாறா ஆதரவு!!!

தன்னுயிரில் பாதியாக 
தன் துணையை 
கொண்ட போது - மனைவியாய்
கபடமில்லா காதல்!!!

 எதிர்வரும் சவால்களை 
துணிச்சல் கொண்டு 
எதிர் நோக்கும் போது 
உலகின் சக்தியாய் - புதுமைப் பெண்!!!
http://eluthu.com/kavithai/46182.html 

Thursday, May 19, 2011

மெழுகுவர்த்தி

 
மௌனமாய் கரைகிறேன்...
உருகி வழிந்தோடுகிறேன்.....
திரியை உடலாக்கி 
மெழுகை உயிராக்கி
ஒளி கொடுக்க 
 உடலைக் கொழுத்தி 
உயிரைக் கரைத்துக் 
கொண்டிருக்கிறேன்.....


 

Related Posts Plugin for WordPress, Blogger...