Wednesday, June 17, 2015

மெட்டுக்கேற்ப பாடல்

மெட்டுக்கேற்ப பாடல் எழுதும் போட்டிக்கு எனது பாடல்.

சகோதரர் வல்வைரான் அறிவித்திருந்த வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” போட்டிக்காக எழுதப்பட்ட பாடல்.



ஆண் : கண்ணுக்குள்ளே கண்மணி போலே
             காத்து வைத்தேன் உந்தன் நினைவினையே
             கனலாய் மாறி நீயும் உறுத்த
             கண்ணீராய் வழியுது என் காதலே !  

பெண் : கடலோடு சண்டையிட்டு அலையெலாம்
              கரைதேடி  ஓடிச்  செல்லும்  ஓர்  நொடி
              கண்ணிமைக்கும்   மறு   நொடியே
              கடலையே  சேர்ந்திடும்  அலைகளெலாம் !
              ஓடும்  அலைதனை  கைநீட்டி  அழைக்கும்
              கடலென  - எந்தன்  எண்ணங்களால்
             உனையென்  அருகே  அழைக்கிறேன் ! 

ஆண்  :  கண்ணில்  மின்னும்  புன்னகையே
              கட்டி இழுக்குது  இதயம்  தனையே !
              துடிக்கும்  இதயமதும்  சொல்லுமே
             ஒவ்வோர்  நொடியும்  உன்  பெயரையே !

பெண் :  தழுவ  வரும்  காற்றினையே
               தள்ளி நிற்கச்  சொல்லி விடேன்!
              எனக்கே  சொந்தமான  இதயமதே
              தென்றல்  தனையும்  தீண்ட  விடேன் !

ஆண் :  இராணி என நீ  வீற்றிருக்கும்
             என் இதயமுந்தன்  சிம்மாசனமே
             உந்தன் கடைக்கண்  பார்வை பட
             காத்திருக்கும்  சேவகனுமிங்கு  நானே !

பெண் :  மொட்டவிழ்ந்த  மலராய்  உந்தன்
               தோள் சேர  நாள் பார்க்கிறேன்
              குத்தும் சிறு முள்ளாய் தான்
              நாணமும்  இங்கு    அணைபோடுகிறதே !

ஆண் : கண்ணுக்குள்ளே கண்மணி போலே
             காத்து வைத்தேன் உந்தன் நினைவினையே
             கனலாய் மாறி நீயும் உறுத்த
             கண்ணீராய் வழியுது என் காதலே !  

பெண் :     கவலை  ஏனோ  காதலனே – நம்
                  காதலே நமை இணைக்கும்
                  நினைவினிலும்  நிஜத்தினிலும் !
                 நிஜத்தில்  இணையும்  நாள் வரை – உன்
                நினைவில்  மணக்கும்  மலராய்  நான்
                வாசம்  வீசிடுவேன்  உன்  வாழ்வினிலே !

ஆண் :        இதய வாசல்  திறந்த  தேவதை
                    இல்ல வாசல்  அலங்கரிக்க
                    நன்னாள்  வருமென  காத்திருக்கிறேன்
                    அந்நாள்  வரும் வரை உனை
                   எந்தன் இதயமதில்  பூஜிக்கிறேன் !
     
 பாடலுக்கான மெட்டு : https://soundcloud.com/rajamuhunthan/paadalaasiriyar

மெட்டுக்கேற்ப பாடல் எழுதுவதில் எனது முதல் முயற்சி.  

6 comments :

  1. வெற்றி பெற வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. போட்டி முடிந்து விட்டது நண்பரே. பரிசு கிட்டவில்லை. எழுதியதை இங்கு பகிர்ந்துள்ளேன்.

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகட்கும் நன்றிகள் பல நண்பரே.

      Delete
  2. பாடல் நல்லாத்தான் இருக்கு. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. போட்டி முடிந்து விட்டது ஐயா. ஆனால் பரிசு கிட்டவில்லை.

      தங்களது அன்பான வருகைக்கும் வாழ்த்துகட்கும் நன்றிகள் பல ஐயா.

      Delete
  3. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் நன்றிகள் ஐயா.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...