இணையத் தமிழ் ! - அது
தமிழரின் எண்ணங்களை
இணைக்கும் தமிழ் !
அழகுத் தமிழ் இருக்கையிலே
பிறமொழிக் கலப்பும் இங்கெதற்கு ?
தமிழை தமிழாக எழுதாது -
தமிழை பிறமொழியில் எழுதி
மொழிப் படுகொலையும் செய்வதேனோ ?
மொழியின் அடையாளம் உருக்குலைந்தால்
இனமும் சுவடிலாது மறைந்திடாதோ ?
தமிழ் மொழியும் இனமும் அடுத்த சந்ததியில்
அருங்காட்சியகப் பொருளாக போக வேண்டுமா ?
செந்தமிழும் நாப்பழக்கம் - இங்கே
கணினித் தமிழும் விரல் பழக்கம் !
கற்க முயற்சித்தல் பிழையில்லையே ?
உள்ளக் கருத்தை விளக்குதல் எளிதாகுமே !
கடல் கடந்து வாழும் தமிழர்தம்
கண்ணின் மணியான கிள்ளைகட்கு
தித்திக்கும் தமிழமுதை இணையமதன்
துணைகொண்டு ஊட்டிடுவோம் !
எளிமையும் தெளிவுமான
கண்கவர் அழகுநிறை காணொளியில்
பிழையிலா உச்சரிப்பிலும் கவனம் கொள்வோம் !
இனிமைத் தமிழாலே இணையத்திலே இணைந்திடுவோம் !
தமிழரின் எண்ணங்களை
இணைக்கும் தமிழ் !
அழகுத் தமிழ் இருக்கையிலே
பிறமொழிக் கலப்பும் இங்கெதற்கு ?
தமிழை தமிழாக எழுதாது -
தமிழை பிறமொழியில் எழுதி
மொழிப் படுகொலையும் செய்வதேனோ ?
மொழியின் அடையாளம் உருக்குலைந்தால்
இனமும் சுவடிலாது மறைந்திடாதோ ?
தமிழ் மொழியும் இனமும் அடுத்த சந்ததியில்
அருங்காட்சியகப் பொருளாக போக வேண்டுமா ?
செந்தமிழும் நாப்பழக்கம் - இங்கே
கணினித் தமிழும் விரல் பழக்கம் !
கற்க முயற்சித்தல் பிழையில்லையே ?
உள்ளக் கருத்தை விளக்குதல் எளிதாகுமே !
கடல் கடந்து வாழும் தமிழர்தம்
கண்ணின் மணியான கிள்ளைகட்கு
தித்திக்கும் தமிழமுதை இணையமதன்
துணைகொண்டு ஊட்டிடுவோம் !
எளிமையும் தெளிவுமான
கண்கவர் அழகுநிறை காணொளியில்
பிழையிலா உச்சரிப்பிலும் கவனம் கொள்வோம் !
இனிமைத் தமிழாலே இணையத்திலே இணைந்திடுவோம் !
அருமை... இணையம் மூலம் இதயத்தில் இணைந்தே இருப்போம்...
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.
Deleteஅருமையான பா வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சகோதரி.
Delete//செந்தமிழும் நாப்பழக்கம் - இங்கே
ReplyDeleteகணினித் தமிழும் விரல் பழக்கம் !//
அருமையான கவிதை தோழி, வாழ்த்துகள்
நன்றிகள் பல தோழி.
Deleteசிறப்பான பா வரிகள்..... பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி சகோதரரே.
Delete