ஊனில் இடமளித்து
ஐயிரு திங்கள்
கருதனில் சுமந்து
உயிரும் உணர்வும் தானளித்து
கருத்தாய்க் காத்து
நாளொரு மேனியாய்
வளரும் பிள்ளைக்காக
தாயாய் பிறப்பெடுத்து
தன் உதிரத்தையே பாலாக்கி
பாசத்துடன் புகட்டி
சுற்றியிருக்கும் உலகின்
இயக்கமெல்லாம் மறந்து போக
பெற்ற பிள்ளையே உலகமாகிவிட
உணவு உறக்கமெல்லாம்
பிள்ளையின் சிரிப்பதனில்
மறந்தே போய்விட
ஒவ்வோர் நாளும்
பிள்ளையின் நினைப்புடனே
விடியலை எதிர்கொள்ள
உரு கொடுத்த தந்தை தொடங்கி
உலகிலுள்ள உறவிற்கெல்லாம்
அறிமுகம் செய்து வைத்து
ஊதியம் ஏதும் வாங்காது
அறிவு புகட்டும் ஆசானாய்
நலம் பேணும் மருத்துவனாய்
ஓய்வு ஒழிச்சலின்றி
கண்ணெனக் காக்கும் காவலனாய்
தியாகத்தின் மறு உருவாய்
உண்மை அன்பிற்கு இலக்கணமாய்
உலகத்து உயிர்கட்கெல்லாம்
இறைவனளித்த உன்னத வரம் -
அம்மா !!!
கிரேஸ் பிரதிபா commented on your blog post
//தியாகத்தின் மறு உருவாய்
உண்மை அன்பிற்கு இலக்கணமாய்
உலகத்து உயிர்கட்கெல்லாம்
இறைவனளித்த உன்னத வரம் -
அம்மா !!! // உண்மை உண்மை!
அருமையான கவிதை. அன்னையர் தின வாழ்த்துகள்!
அம்மா !!!
Dindigul Dhanabalan
ReplyDelete21 Apr 2013 - Public
வலைத்தளம் வைத்துள்ள நண்பர்களுக்கு :
சமீபத்தில் கூகிள் பிளஸ், வலைத்தளங்களில் கருத்துரைப்பெட்டி வைக்க எளிதான வழிமுறையை அறிமுகம் செய்தது அனைவரும் அறியலாம்... அதனால்... ?????
1. G+ profile இல்லாத எவரும் கருத்து இடம் முடியாது (openID, Anonymous வசதிகள் இல்லை)
2. அனைத்து comment களும் Blog owner-ஆல் கட்டுப்படுத்த முடியாது.
3. Blogger dashboard-ல் Comment எண்ணிக்கை 0 என காட்டுகிறது.
இன்னும் பல முக்கியமான பிரச்சனைகளை அறிய கீழ் உள்ள எனது நண்பர் தளத்தில் அறியவும்...
http://www.tamilcc.com/2013/04/google-comments-box.html
மற்றுமொரு இனிய நண்பர் அவசரப்பட்டு மாறினார்... அதனால் என்ன நடந்தது என்பதை அறிய இங்கு செல்லவும்...
http://kaviyazhi.blogspot.in/2013/04/blog-post_20.html
உடனே மாற வேண்டாம் என்பதே இத்தகவலின் நோக்கம்… நன்றி நண்பர்களே...
அன்புடன் DD