இறைவனின் கைவண்ணத்தில்
எழிலான கலைப் பொக்கிஷமென
அழகு சிற்பமென - இயற்கை !!!
அணு அணுவாய் இரசித்து
ஆக்கியளித்த சிற்பி
மலை மகளுக்கு
மேகங்கள் கொண்டு
அழகிய கிரீடமணிவித்து
நீர்வீழ்ச்சியால் வெள்ளி
சரிகை பட்டுடுத்தி
சலசலக்கும் நீரோடை தன்னை
வனிதையவளுக்கு கொஞ்சும்
சலங்கைகளாக்கி - வானுயர்ந்த
நீள் மரங்கள் எல்லாம்
மங்கையவள் கூந்தலாக
வெண்ணிலவும் கதிரவனும்
அவள் கூந்தலில் அசைந்தாடும்
மல்லிகை கனகாம்பரம் என்றாக
இவற்றை ஆக்கியளித்த
இறைவன் - ஈடிணையில்லா
கலைஞன் அன்றோ !!!
''..இறைவன் - ஈடிணையில்லா
ReplyDeleteகலைஞன் அன்றோ !!!..''
நல்ல வருணனை.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் கவியே !!!
Delete