மேகமதன் தோள் சாய்ந்து
மதி வனிதையும் மெல்ல
ஒளி முகத்தை
நாணத்துடன் வெளிக்காட்ட
அவள்தம் நளினத்தில்
மயங்கிய விண்மீன்கள்
ஆராதனை மாலைகள் சூட்ட
வெட்கமது தானாய் வந்து
ஒட்டிக் கொள்ள - துள்ளி ஓடி
மேகமதன் பின்னால்
தனை மறைத்து
முகில் கூட்டத்தையே
ஆடையெனக் கொண்டு
நீரதில் தன்
எழில் வதனம் கண்டதும்
நாணம் ஆட்கொள்ள
நிலாப் பெண்ணவளும்
இதழோரத்தில் புன்னகை உதிர்க்க
பளிச்சிடும் புன்னகை ஒளியில்
இனிதாய் ஓர்
இனிமையான வரிகள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteநீரலையில் தனைக்கண்டு
ReplyDeleteநிலவதுவும் நாணியதென்று
நீர்வடித்த பாதருதே
நிறைவான சுவைமிகவே!
அருமை. வாழ்த்துக்கள் தோழி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.
Delete