Wednesday, May 22, 2013

எளிமையின் விலை





இருக்குற சொற்ப
கையிருப்பத் தான் போட்டு
அன்னன்னைக்கு கிடைக்கும்
பண்டங்கள ஏலத்துல தானெடுத்து
ஓலைக் கூடையில தான் சுமந்து
வெயிலு ஏறுமுன்ன சந்தைக்கு
வந்து சேர்ந்து - இடம் தேடி
கோணி விரிச்சு கடை பரப்பி
கூறுகட்டி வச்சுக்கிட்டு
எட்டணா மட்டும் இலாபம் வைச்சு
விலை சொல்லி வித்தாக் கூட
முதலுக்கே மோசம் வருமளவுக்கு
பேரம் பேசி நிக்கிற மக்கா -
கண்ணாடி போட்டு மறைச்ச
குளிரான கடைக்குள்ள
பேரமே என்னன்னு தெரியாதது போல
சொன்ன வெலைக்கு வாங்கிப் போறீயளே
எளிமையில இல்லாத சுத்தம்
படாடோபத்துல இருக்குறதா
நினைக்கிறீயளோ - இல்ல
வெள்ளந்தி  ஏழை மக்க
ஏமாத்திப்புடுவாக - பகட்டான
மக்களுந்தான் நியாயமா நடப்பாகன்னு
நினைக்கிறீயளோ ??

4 comments :

  1. ஆதங்கம் அருமை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  2. இன்றைக்கு அப்படித்தான் பலருக்கும் நினைப்பு... ஆனால் வெள்ளந்தியான இவர்களிடம் உழைப்பையும், திருப்தியும், சந்தோசத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா.தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...