கண்கள் சோர்ந்து
நம்பிக்கை விளக்கும்
மங்கிய நொடிதனில்
வாழ்வும் தள்ளாடியதாய்
எண்ணுகையில்
சட்டென்று இடியோசை
கேட்டு
தலை தூக்கிப் பார்த்தேன்
–
எதிர்பாரா நொடியில்
இச்சென்று நெற்றிதனில்
முத்தமிட்டு –
உள்ளமெங்கும்
புத்துணர்வு பரப்பி
உயிர்வரை எதிரொலிக்க
உரக்க உரைத்தது
மழைத்துளி
–
இன்னும் இருக்கிறது
ஆகாயமென்று !!!!
ரசித்தேன்...
ReplyDeleteமிக்க நன்றி...
Deleteஅருமை... எண்ணங்களை மழையாகப்பொழியும் முகிலுக்கு வந்தனங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி...
Deleteஅருமையான கற்பனை
ReplyDeleteஅருமையான கவிதை
மிக்க நன்றி சகோதரி.
Delete