கண்மணியே !!
உன் வரவிற்காய்
காத்திருந்த வேளைகளில்
நேரமும் காலமும் கூட
சதி செய்து – சக்கென்று
நின்று கொண்டு
நகர மறுத்து – சண்டித்தனம்
செய்தது போன்றொரு பிரமை
!!!
பொழுது போகாத சிலபேர்
நட்பென்று சொல்லிக் கொண்டு
நயமாய் பேசுவதாய் எண்ணிக்
கொண்டு
நச்சென்று நெஞ்சில் ஆணி இறக்குவர்
……………
நம் ஏக்கமதையும் மறந்து எள்ளி
நகையாடுவர் !!
துன்பத்தை துயரத்தை கிண்டிக்
கிளறி மகிழ்ந்தோருக்கு
இன்றவர் நினைவலைகள் தனில்
– கடந்து போகும்
மேகமாய்க் கூட நாமிருப்பதற்கு
வாய்ப்பில்லை !!!
காலத்தின் சுழற்சியில்
காயப்படுத்தியோர் எல்லாம்
காணாமல் போய்விட
கண்ட கனவுகளெல்லாம்
கண்முன் இன்று நிஜமாகி
களிப்பளித்திட – ஒவ்வோர்
கணமும் வாழ்வுதனில்
கற்கண்டாய் !!!
//நயமாய் பேசுவதாய் எண்ணிக் கொண்டு
ReplyDeleteநச்சென்று நெஞ்சில் ஆணி இறக்குவர் ………//
நிறைய பேர் அப்படி இருக்காங்க உலகத்துல...
//இன்றவர் நினைவலைகள் தனில் – கடந்து போகும்
மேகமாய்க் கூட நாமிருப்பதற்கு வாய்ப்பில்லை !!!// - உண்மை, அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்
//கண்ட கனவுகளெல்லாம்
கண்முன் இன்று நிஜமாகி
களிப்பளித்திட – ஒவ்வோர்
கணமும் வாழ்வுதனில்
கற்கண்டாய் !!!// அழகு! இனிமை!
//நிறைய பேர் அப்படி இருக்காங்க உலகத்துல...
ReplyDeleteஅவர்களெல்லாம் தாம் செய்வது தவறென்று என்றுணர்வரோ !!!
தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி...
சிறந்த கவிதை அன்பரே தொடருங்கள்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே !!!
Delete