பிரித்தறிய முடியாத
பால் நீர்க் கலவையினின்று
நீரைப் பிரித்தெடுத்து
தூய்மையான பாலை
பருகும் அன்னப் பட்சியே
உலக மாந்தருள்
பிரித்தறிய இயலாதவாறு
விரவிக் கிடக்கும்
நல்லவர் –
தீயவர்
இனம் காண
நல்லதொரு உத்தியை
கற்றுக் கொடேன் !!!

கவிதை எழுதியமைக்குபூங்கொத்து வழங்கி கௌரவித்தமைக்கு திரு.வெங்கட் நாகராஜ் அவர்கட்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.
அழகிய சிந்தனை வாழ்த்துக்கள் உங்கள் எண்ணக்
ReplyDeleteகவிதைகள் உலகை வலம் வரட்டும் .இன்று போல்
என்றும் எம் உறவும் தமிழோடு இணைந்திருக்கட்டும் !
மிக்க நன்றி பகிர்வுக்கு .
தங்களது பெயர் "அம்பாளடியாள்" மிகவும் இரசித்தேன் சகோதரி.தங்களது வருகைக்கும்,வாழ்துக்கட்கும்,கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.இனிக்கும் தமிழால் இணைந்திருக்கட்டும் நம் உறவும் என்றென்றும்.
Delete''..விரவிக் கிடக்கும்
ReplyDeleteநல்லவர் – தீயவர்
இனம் காண
நல்லதொரு உத்தியை
கற்றுக் கொடேன் !!!...'''
good.
Vetha.Elangathilakam
மனமார்ந்த நன்றிகள் கவிஞரே !!! தங்களின் பாராட்டுதல்களைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.
Delete