Sunday, April 14, 2013

நட்பா ?? காதலா ??



நட்பு   மலரொன்று
ஆண்-பெண்ணிடையே
மலர்ந்திருக்க -அவர்கள் தான்
பார்த்து சிரித்தால்  கூட
அறியா உலகம் அதை
காதலென்று எண்ணிடும் -
கட்டுக் கதைகள் பலவும்
பலவிதமாய் பலரின்
காதுகளில் ரீங்கரித்திடும் !!!
அறியாப் பேதை உலகம்
ஆயிரம் பேசும் - நம்மை
நன்குணர்ந்த நாமே
தடுமாறுதல் முறையோ ??
கண்ணே மணியே என்றுருகும்
காதல் - காலப்போக்கில்
காணாமல் போகும் !!! இன்று -
கனியாய் இனிப்பதும் நாளை
காயாகிப் போவதென்னவோ
காதலில் மட்டும் தான் !!!
உண்மையான  நட்பும்
உளமார்ந்த புரிதலும்
உருவாக்கிடுமே என்றும்
உளம்தனில் நிறைந்த
இனிமையான  நினைவுகளை !!!
உள்ளம் அறியாது
உலகும் அறியாது கள்ளனாய்
உள்புகும் காதலைவிட
உண்மையான உறுதியான
நட்பு - உன்னதமானது !!!!

http://tamilnanbargal.com/node/50633


6 comments :

  1. நட்பை சிறப்பித்தது நன்று...

    நட்பு தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா !!

      Delete
  2. நட்பினை நட்பென்று மட்டும் கொள்ளல் வேண்டும்.

    அழகாகச் சொல்லெடுத்து கட்டிய மாலை. அருமை.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மனமார்ந்த நன்றி சகோதரி !!!

      Delete
  3. நட்பு உன்னதமானது என்று சொல்லும் நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!

    "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரளவின்றே சாரல்
    கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே" இங்கு 'நட்பு' என்று சொல்வது காதல். நல்ல புரிதல் உள்ள நட்பு காதலாவது ஏற்கக்கூடியதே அல்லவா?

    //கண்ணே மணியே என்றுருகும்
    காதல் - காலப்போக்கில்
    காணாமல் போகும் !!!// எல்லாக் காதலும் அப்படி அல்லவே :) மன்னிக்க வேண்டும் சகோதரி , நல்ல கவிதை அதனால் ஆராய்ந்துவிட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி !!!

      ஆராய்ந்து - தவறிருப்பின் சுட்டிக் காட்டித் திருத்தும் நல் நண்பர்கள் நல்லாசானன்றோ ?

      தங்களது மேலான கருத்துகட்கு என் நன்றிகள் சகோதரி!!!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...